Monday, November 19, 2012


 யாழின் உற்பத்தியை விரும்பும்  தென்னிலங்கை ..............

யாழ்ப்பாணத்தில் உற்பத்திசெய்யப்படும் பனை உற்பத்திப் பொருட்களை தென்னிலங்கை மக்கள் மற்றும் வெளிநாட்டவர்களே அதிகம் கொள்வனவு செய்வதாக யாழ்.சந்தை உள்ளூர் விற்பனை நிலைய வியாபாரிகள் தெரிவித்தனர் . யாழ்.மக்கள் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக்காலான பொருட்களையே அதிகம் வாங்கிக் கண்ணாடிப் பெட்டிக்குள் அழகுக்காக அடுக்கி வைக்கின்றனர். ஆனால், தென்னிலங்கை மக்கள் பனை உற்பத்திப் பொருட்களையே கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கின்றனர் என்றார் சி.பழனிவேலு என்ற வியாபாரி.  பனை ஓலையால் பின்னப்பட்ட இடியப்பத்தட்டு, பாய்கள், பெட்டிகள், கடகம், சுளகு, கூடைகள், விசிறிகள், முங்கில் பிரம்புகள் என்பன மட்டுமன்றி, கண்ணைக் கவரும் வகையில் வர்ணங்கள் ப+சப்பட்ட ஓலையால் தயாரிக்கப்பட்ட அலங்கார சுவர் மாட்டிகள், பென்சில் பை, கைத்தொலைபேசிக் கவர், பூக்கூடைகள், பென்சில் பேர்ஸ், கைப்பைகள், தொப்பிகள் என ஏராளமான பனை உற்பத்திப் பொருட்கள் யாழ்ப்பாணச் சந்தையில் விற்பனைக்க வைக்கப்பட்டுள்ளன.
தச்சன்தோப்பு, வட்டுக்கோட்டை, பருத்தித்துறை, இருபாலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலிருந்தே இவற்றைக் கொள்வனவுசெய்து விற்பனை செய்வதாகவும், யாழ்.சந்தையில் 15ற்கும் மேற்பட்ட கடைகளில் இவை விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டனர் . இதேவேளை,  அலங்கார சுவர் மாட்டிகள், பென்சில் பை, கைத்தொலைபேசிக் கவர், பென்சில் பேர்ஸ், கைப்பைகள், தொப்பிகள் போன்ற கைவினைப் பொருட்ககளை தென்னிலங்கை மக்களே தமக்கு விலைக்குத் தருவதாகவும் அவர்கள் கூறினர்.


yasi.....

No comments:

Post a Comment