Monday, November 19, 2012

 பூலோக கற்பக தரு என்கிற பெருமைக்கு உரியது பனை. இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வளங்களில் ஒன்று பனை மரம்.


.பனை அபிவிருத்திச் சபையின் சந்தைப்படுத்தல் பிரிவினை விரிவுபடுத்துவதற்காகவும் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்களை இலங்கை வாழ் அனைத்து மக்களையும் சென்றடைவதற்காகவும் புதிதாக "கற்பகம்" விற்பனை நிலையங்கள் சில பிரதேசங்களில் திறக்கப்படவுள்ளன.
தற்போதைய முன்னெடுப்பின்படி கொழும்பில் பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள மக்கள் அருங்கலை பேரவையில் (Janakala Kendra) கடந்த மாதம் திறக்கப்பட்டது. தற்போது அங்கு அன்றாட விற்பனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது 

                   அதைத் தொடந்து கற்பிட்டி, குருநாகலை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலும் புதிதாக "கற்பகம்" விற்பனைநிலையமொன்றை திறப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது எமது சபைதலைவரின் கீழ் சந்தைப்படுத்தல் பிரிவினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.பனை அபிவிருத்திச் சபையின் புதிய உற்பத்திப் பொருட்களை கூடிய நாட்கள் பழுதடையாத வண்ணம் தயாரிப்பதற்கும் அது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காகவும் பனை ஆராய்ச்சி நிலையம் ஒன்று யாழ்ப்பாணத்தின் கைதடி பிரதேசத்தில் அமைச்சினால் புனருத்தாபனம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

யாழ். மாவட்டத்தில் பனை சார் உற்பத்தி உணவுப் பொருட்கள் சித்த மருத்துவ குணாம்சம் கொண்டவை என தென்னாபிரிக்க குழுவினர் தெரிவித்ததுள்ளதுடன், யாழ். மாவட்டத்தில் பனைசார் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தகவல்களை திரட்டிச்
சென்றுள்ளனர்.அத்துடன், பனைசார் உற்பத்திகளை கொள்வனவு செய்வதுடன், சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த நடவடிக்கை ஏடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதாக பனை அபிவிருத்திசபை தலைவர் மேலும் தெரிவித்தார்.
பனை சார் உற்பத்தி பொருட்களுக்கு தென்னாபிரிக்காவில் சந்தை வாய்ப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வதாக தென்னாபிரிக்க குழுவினர் உறுதியளித்துள்ளதாக பனை அபிவிருத்திசபை தலைவர் பசுபதி சீவரத்தினம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தென்னாபிரிக்க குழுவினர் கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தினை சென்று பார்வையிட்டதுடன், தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த உற்பத்தி பொருட்களையும் பார்வையிட்டுள்ளனர்.
           
 பனம் கழியை பிரித்தெடுக்கும் இயந்திரம் மற்றும் பனாட்டு பதனிடும் இயந்திரம் ஆகியன பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.கைத்தொழில் ரீதியாக பயன்படுத்தப்பட்ட பனாட்டுப் பதனிடும் இயந்திரத்தை பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினத்திடம் தேசிய இயந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவன ஆராய்ச்சி நிபுணர் மாலினி ரணதுங்க நேற்று வழங்கிவைத்தார்.பனை ஆராய்ச்சி நிறுவனமும், தேசிய இயந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையமும் இணைந்து குறித்த பனம் கழியினை பிரித்தெடுக்கும் இயந்திரத்தினை தயாரித்துள்ளன.உற்பத்தியினை அதிகரித்துக்கொள்ளவும், பனம் பானம் பிரித்தெடுக்கும் நேரத்தினை மீதப்படுத்தும் நோக்கத்துடனும் பனாட்டு பதனிடும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.இவ் இயந்திரத்தில் சுமார் 150 பனம் பழத்தினை குறித்த இயந்திரத்தில் இட்டு 100 லீற்றர் பனம் பானத்திற்கு மேல் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் குறித்த இயந்திரத்தினை பயன்படுத்தும் முறை குறித்து தேசிய இயந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவன ஆராய்ச்சி நிபுணர் மாலினி ரணதுங்க, மற்றும் பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் ஆகியோர் பனை ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தனர்.அத்துடன் பனாட்டினை சோலர் மூலம் பதனிட்டு அதனை பாதுகாப்பாகவும், மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உபகரணமும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம், முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
                                                                                                                                      yasi..........

1 comment:

  1. அன்பரே. பனைமரம் நடவு செய்தால் பலன் தர நீண்டகாலம் அதாவது பல ஆண்டுகள் கழித்து தான் பலன் தருகின்றது. பனை வைத்தவன் பார்த்துட்டு சாவான், தென்னை வைத்தவன் சாப்பிட்டு விட்டு சாவான் என்பது கிராமத்து மொழி. குறுகிய காலத்தில் தென்னை மரம் போன்று 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் பலன் தரும் வீரிய ஒட்டு ரகங்கள் உள்ளனவா..தகவல் தந்து உதவுங்கள்..
    dtw.isak@gmail.com

    ReplyDelete