தற்போதைய முன்னெடுப்பின்படி கொழும்பில் பத்தரமுல்ல பிரதேசத்தில்
அமைந்துள்ள மக்கள் அருங்கலை பேரவையில் (Janakala Kendra) கடந்த மாதம்
திறக்கப்பட்டது. தற்போது அங்கு அன்றாட விற்பனை நடவடிக்கைகள் தொடர்ந்து
நடைபெற்று வருகின்றது
யாழ். மாவட்டத்தில் பனை சார் உற்பத்தி உணவுப் பொருட்கள் சித்த மருத்துவ
குணாம்சம் கொண்டவை என தென்னாபிரிக்க குழுவினர் தெரிவித்ததுள்ளதுடன், யாழ்.
மாவட்டத்தில் பனைசார் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தகவல்களை திரட்டிச்
சென்றுள்ளனர்.அத்துடன், பனைசார் உற்பத்திகளை கொள்வனவு செய்வதுடன், சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த நடவடிக்கை ஏடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதாக பனை அபிவிருத்திசபை தலைவர் மேலும் தெரிவித்தார்.
சென்றுள்ளனர்.அத்துடன், பனைசார் உற்பத்திகளை கொள்வனவு செய்வதுடன், சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த நடவடிக்கை ஏடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதாக பனை அபிவிருத்திசபை தலைவர் மேலும் தெரிவித்தார்.
பனை சார் உற்பத்தி பொருட்களுக்கு தென்னாபிரிக்காவில் சந்தை வாய்ப்பினை
மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வதாக தென்னாபிரிக்க குழுவினர்
உறுதியளித்துள்ளதாக பனை அபிவிருத்திசபை தலைவர் பசுபதி சீவரத்தினம் இன்று
திங்கட்கிழமை தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தென்னாபிரிக்க குழுவினர் கைதடியில்
அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தினை சென்று பார்வையிட்டதுடன்,
தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த உற்பத்தி பொருட்களையும்
பார்வையிட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் குறித்த இயந்திரத்தினை பயன்படுத்தும் முறை குறித்து தேசிய
இயந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவன ஆராய்ச்சி நிபுணர் மாலினி
ரணதுங்க, மற்றும் பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் ஆகியோர்
பனை ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தனர்.அத்துடன்
பனாட்டினை சோலர் மூலம் பதனிட்டு அதனை பாதுகாப்பாகவும், மழையில் இருந்து
பாதுகாத்துக் கொள்வதற்கான உபகரணமும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பனை
அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம், முகாமையாளர்கள் மற்றும்
உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
yasi..........
No comments:
Post a Comment