Friday, August 24, 2012

யாழ் பூமியானது விவசாயத்தின் முதுகெலும்பாகவும் ,விவசாயத்தை பாரன்பரியமாகவும் ,அடிப்படையாகவும் கொண்ட பனை பூமியாகும் ..யாழில் பிரதான விவசாயமாக பனை வளம் காணப் படுகின்ற அதே வேலை புகையிலை,வெங்காயம் ,கிழங்கு ,திராட்சை போன்ற பயிர்களும் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்றது எனலாம் . குடாநாட்டு மக்களின் அடிப்படையாக விளங்குவது விவசாயமே .ஆகவே தான் விவசாய பூமி என யாழ்ப்பாணத்தை குறிப்பிடப்படுகின்றது .1980  களின் முன்னரான யாழ்ப்பாணத்தின் விவசாயமானது இலங்கயின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகித்தது எனலாம் .யாழ் மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கான பயிர்கள் கொண்டுசெல்லப்பட்டது .அது மட்டுமன்றி புகையிலை உற்பத்தியிலும் முன்னணி வகித்த மாவட்டமாக குடாநாடு விளங்கியது,மக்களின் அன்றாட சீவியதுக்கும் பாரிய அளவில் கைகொடுத்தது ..குடாநாட்டின் விவசாயிகளுக்கும் மக்களுக்குமான பொருளாதார உறவும் சிறப்பாக அமையப்பெற்றது .எனினும் கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின் விளைவாக யாழின் விவசாயமும் யாழின் வளர்ச்சியும் முற்றாக அழிந்து விட்டது .மற்றும் A9  பாதை மூடப்பட்ட பின்னர் குடாநாட்டில் இருந்து உற்பத்தி செய்யும் விவசாய  பொருட்களையும்  ஏற்றுமதி செய்ய முடியாமல்  போனது .  யாழின் பிரதான சின்னமாகவும், யாழை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னமாகவும்  விளங்கிய பனை வளம் முற்றாக அளிக்கப்பட்டது. யின் நிலையில் யுத்தம் முடிந்து தற்போது வரை குடா நாட்டில் விவசாயம் மீள் எழுச்சி கண்டுள்லாத? மக்கள் தம் பழைய நிலைமைக்கு மாறியுள்ளனரா ? இது தொடர்பான தகவல்கள் இனி வரும் எமது யாழ் பூமி  வலைபூவில் ..............

                                                                                                                                      YASI......

No comments:

Post a Comment