யாழ் மண்ணில் பனை பயிர் செய்கையானது தற்போது நல்ல ஒரு நிலைமையை வகிக்கின்றது. இப் பனை பயிர் செய்கைக்கு இலங்கை அரசு மட்டுமின்றி இந்திய அரசினாலும் நல்லதொரு பங்களிப்பை செய்கின்ரதென்பதும் குறிப்பிடத்தக்கது... எனினும் அரசினால் வழங்கப்படும் நிதி உதவிகளானது போதுமானதாக இல்லை என்றும் ,பனை பயிர் செய்கையை மட்டும் நம்பி வாழும் தொழிலாளர்களுக்கும் , உற்பத்தியில் செயட்படுவோருக்கும் இது சொல்லத்தக்க அளவு நன்மைகள் கிடைப்பதாக இல்லை என்றும் பனை அபிவிருத்தி சபையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூறுகின்றனர் . மற்றும் பனைப்பொருட்களுக்கு அரசினால் நிரந்தர விலை நிர்ணயிக்க முடியாத சூழ்நிலையில் பனைப் பொருட்களின் விற்பனையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பனை அபிவிருத்தி சபையின் பனைப் பொருட்களிற்கான பணிப்பாளர் திரு . பாலகிர்ஷ்ணன் குறிப்பிட்டார் ..
யசி .....
No comments:
Post a Comment