வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் பிடித்திருப்பது வேளான்மையாகும். 2011ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் 24.2 %சதவீத வளர்ச்சி வேளாண்மை துறையிலே காணப்பட்டது என்பது மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் மூலம் தெரிய வருகின்றது . இவ் வேளாண்மை துறையில் கால் நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் என்பன முக்கிய இடத்தில் காணப் படுகின்றது. யாழ் விவசாயம் என்கின்ற போது முதல் நினைவுவருவது யாழ்பாணத்தின் வெங்காய உற்பத்தியாகும் . கடந்த மூன்று தசாப்பத கால யுத்தத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் வெங்காய உற்பத்தி வீழ்ச்சி அடைந்த போதிலும் யுத்தத்தின் பின்னரான யாழ் வெங்காய உற்பத்தி சிறந்த முறையில் காணப்படுவதாக யாழ் விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் ஸ்ரீபாலசுந்தரம் தெரிவித்தார் . 2012 ஆம் ஆண்டு 3730 ஹெக்டேயர் நிலபரப்பில் வெங்காய உற்பத்தி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் 60,800மெற்றிக் தொன் வெங்காய உற்பத்தியினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .
By:- R.Raviragu
Tamil Radio Unit
By:- R.Raviragu
Tamil Radio Unit
No comments:
Post a Comment